சமீப காலமாக மனிதனின் உணவுக்குழாய், ஜீரண மண்டலம் இதனைப் பற்றி ஆய்வுகள் கூடுதலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோக்கியமான, நீண்ட கால வாழ்விற்கு ஜீரண மண்டல ஆரோக்கியம் மிக முக்கியமானது என ஆய்வுகள் கூறுகின்றன.

பல மருத்துவர்கள் குறிப்பாக ஜப்பானிய மருத்துவர்கள் 100 வயதினைத் தாண்டி வாழ்கின்றனர். அத்தோடு மட்டுமல்ல தொடர்ந்து மருத்துவ சேவைகளும் செய்து வருகின்றனர். குடல் ஆரோக்கியம் என்பது உணவில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளே அனைவருக்கும் ஏற்றது.

அதிக சிகப்பு அசைவம் ஜீரணத்திற்கு கடினமானது. மீன் உணவு மிகவும் ஏற்றது ஆகும்.உடற்பயிற்சி என்பதோடு கூட நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 20 நிமிடம் உடற்பயிற்சி செய்து பின் நாள் முழுவதும் அசையாது ஓரிடத்தில் அமர்ந்தபடி இருப்பது குடலினை ஆரோக்கியமாக வைக்காது. உடல் உழைப்பு அதிகம் இல்லாது இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது. அதனால்தான் உங்கள் குடல் உங்களின் “இரண்டாவது மூளை” என்று சொல்லப்படுகின்றது. ஜீரணம் மட்டுமல்லாது பல வேலைகளை குடல் செய்கின்றது.

பொதுவில் ‘ஆரோக்கியம் குடலில்தான் தொடங்குகின்றது என்பர். தவறான உணவு, அளவுக்கு அதிகமான உணவு, சத்தற்ற உணவு இவை ஆரோக்கியம் கெட முதல் காரணம் ஆகின்றன. இவை நச்சுகளை வெளியிட்டு உடல் உறுப்புகளை பாதிக்கின்றன இவற்றினை தடுத்தாலே 90 சதவீதத்துக்கு மேல் உடல் நலம் சீராக இருக்கும்.

இதனால் உங்கள் மன நலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும். நமது குடலில் என்டெரிக்நேரே சிஸ்டம் என்று இருக்கின்றது. இது தானே இயங்குவது. ஜீரணம், சில ரசாயனங்களை வெளியிடுதல் போன்றவை இதனால் ஏற்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version